கழுத்துவலி வரக்காரணம் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் - சியோ தமிழ்

Breaking

Wednesday, August 31, 2016

கழுத்துவலி வரக்காரணம் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள்

கழுத்துவலி வரக்காரணம் மற்றும் அதை
தடுக்கும் வழிமுறைகள் பற்றி நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்



நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப்படுத்துவது கழுத்துப்பகுதியாகும்

கழுத்துவலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை.
அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி. அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக் கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்கு அடித்தளம் அமைக்கும்.


முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்து போவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களால் கழுத்துவலி வருவது அடுத்த வகை. பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத்தொடங்கும்.
ஆனால்,  இப்போதோ இளம் வயதிலேயே இவை தேயத் தொடங்கிவிடுகின்றன. காரணம், இவர்கள் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டது
சிறு, சிறு விஷயங்களில் நீங்கள் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும், இந்த கழுத்து, முதுகு, இடுப்பு வலியில் இருந்து நீங்கள் நிரந்தர தீர்வுக் காண முடியும். அன்றாக வாழ்வில் கலந்திருக்கும் மொபைலில் துவங்கி, நீங்கள் உறங்க செல்லும் தருணம் வரை சிலவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு முழு தீர்வுக் காண ஊட்டச்சத்தும் அவசியம்.
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்
 




No comments:

Post a Comment

Pages