ஜீரகம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை நாம் இந்த வீடியோவில் பார்க்கலாம்
நாம் சமையலில்
சேர்க்கும் ஜீரகம் நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. நமது உடலில் வரும் பல
நோய்களை இது முற்றிலும் அளிக்கிறது அந்த ஜீரகத்தின் நன்மைகளை நாம் இங்கு
பார்ப்போம்
சிறிது ஜீரகமும் , திப்பிலியும் சேர்த்துப் பொடி செய்து அதைத்
தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் நீங்கும்
சிறிது ஜீரகம்
எடுத்து அதனுடன் சிறிது கீழாநெல்லி
சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல்
கோளாறு குணமாகும்
சிறிது
ஜீரகம் எடுத்து ஓமத்துடன் சேர்த்து கஷாயம் செய்து, சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்
சிறிது
ஜீரகத்துடன் இரண்டு வெற்றிலை நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் குறையும்
ஜீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவையனைத்தையும்
சிறிது எடுத்து ஒன்றாக சேர்த்து நன்றாக
பொடித்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்
சிறிது ஜீரகம்,
நல்லமிளகு இரண்டையும்
எடுத்து நன்றாக பொடித்து எண்ணெயிலிட்டுக்
காய்ச்சி, அந்த
எண்ணையை தலையில் தேய்த்துக் குளித்தால்,
கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
உடலுக்கு
குளிர்ச்சியும், தேகத்தைப்
பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் ஜீரகத்திற்கு
உண்டு. எனவே, தினம் உணவில்
ஜீரகத்தை சேர்த்துக்கொள்வது நல்லது
ஜீரகத்தை இஞ்சி,
எலுமிச்சம் பழச்சாறில்
கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு
வர, பித்தம் குணமாகும்
தலைச்சுற்று
வந்தால் சிறிது ஜீரகத்தை மென்று தின்று
ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்
உடல் எடை அதிகம்
உள்ளவர்கள் மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது ஜீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
பெண்களுக்கு
ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நன்றாக அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, வெள்ளை படுதல் குறையும்
ஜீரகத்தை லேசாக
வறுத்து, அத்துடன்
கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்
திராட்சைப்
பழச்சாறுடன், சிறிது
ஜீரகத்தைப் பொடித்து போட்டு , பருகினால்,
ஆரம்பநிலை இரத்த அழுத்த
நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்
மோருடன் ஜீரகம்,
இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத்
தொல்லை நீங்கும்
ஜீரகத்துடன்,
மூன்று பற்கள் பூண்டு
சேர்த்து நன்றாக அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்
அகத்திக்கீரையுடன்,
ஜீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து
அத்துடன் கருப்பட்டி சேர்த்து
சாப்பிட்டால், மன அழுத்தம்
மாறும்.
சுக்கு, ஜீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில்
கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும்
தினமும்
தண்ணீருடன் சிறிது ஜீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம்
பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் ஜீரக
நீர்.

No comments:
Post a Comment