கொல்லிமலை யாத்திரை ...!!!
என்ன பார்க்கலாம்...?
கொல்லியில் என்னென்ன இடங்களை பார்க்கலாம் என ஒரு பட்டியல் இருக்கிறது. கூடவே அவற்றை எந்த வரிசையில் பார்ப்பது என்றும் ஒரு முறை இருக்கிறது. நானே பிரத்யேகமாக தயாரித்த இந்த வரிசைமுறையை பின்பற்றினால் உங்கள் நேரத்தை சேமிக்கலாம்.
1. சோளக்காடு சந்தை
2. வல்வில் ஓரி சிலை
3. சீக்குப்பாறை நோக்குமுனை
4. அரசு தோட்டக்கலை பண்ணை
5. அறப்பளீஸ்வரர் கோவில்
6. ஆகாயகங்கை
7. டெம்பிள் கட் ரோடு நோக்குமுனை
8. மாசி பெரியசாமி கோவில்
9. மாசிலா அருவி
10. நம்ம அருவி (வரைபடத்தில் இல்லை)
11. எட்டுக்கை அம்மன் கோவில்
12. திகம்பரர் சமணக் கோவில்
13. தொன்மையான சமணர் சிலை - கரையான்காட்டுப்பட்டி
14. தாவரவியல் பூங்கா
15. தொன்மையான சிவன் கோவில்
16. படகுத்துறை வாசலூர்ப்பட்டி
17. தொன்மையான சமணர் கோவில் - வாசலூர்ப்பட்டி
18. தொன்மையான சமணர் சிலை – வீரகனூர்பட்டி
19. கொங்கலாய் அம்மன் கோவில் – வீரகனூர்பட்டி
20. சேலூர் கஸ்பா நோக்குமுனை
முதல் நான்கு இடங்களை போகும் வழியிலேயே / தினத்திலேயே பார்த்துவிடலாம். அடுத்த எட்டு இடங்களை மறுநாள் காலை துவங்கி ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு இறங்கலாம். கடைசி எட்டை மூன்றாவது நாள் அல்லது திரும்பும்போதோ பார்க்கலாம்.
நீர் வீழ்ச்சியை ஒட்டி செல்லும் பாதையில் சென்றால் சில சித்தர் சமாதிகளை பார்க்க முடியுமாம்.

No comments:
Post a Comment