கர்நாடகாவில்
ஸ்ட்ரெச்சர் தர மருத்துவமனை மறுத்ததால், கணவனை மனைவியே தரதரவென இழுத்துச் சென்ற காட்சி, சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
கர்நாடகாவில்
ஷிமோலா என்னும் இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெண் ஒருவர் தன் கணவரை எக்ஸ்ரே எடுக்க அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் கொடுக்குமாறு
கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை
நிர்வாகம் ஸ்ட்ரெச்சர் அளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், தனது கணவரை எக்ஸ்ரே எடுக்கும் அறைக்கு அந்த
பெண்ணே தரதரவென இழுத்து சென்றுள்ளார். இந்த பரிதாப காட்சியை அங்கிருந்த ஒருவர்
வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியா
முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது
வாடிக்கையாகிவிட்டது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கவும்,
ஸ்ட்ரெச்சர் வழங்கவும்
மருத்துவமனை மறுப்பது மிகவும் அபட்டமான செயல் என்று சமூக ஊடகங்களில் கடும்
விமர்சனம் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment