மீன் பிடிக்கும் பறவை - சியோ தமிழ்

Breaking

Tuesday, January 30, 2018

மீன் பிடிக்கும் பறவை


கார்மரான்ட் என்ற பறவை மீன் பிடிப்பதில் மிகவும் திறமை கொண்டது. ஜப்பானிய மீனவர்கள் பெரும்பாலும் இதனைப் பயன்படுத்தித் தான் மீன் பிடித்து வருகிறார்கள். அது எப்படி எனில், மீன்கள் நிறைய இருக்கும் இடத்துக்கு படகில் பறவையை எடுத்துச் செல்கிறார்கள். பறவை தனது நீண்ட அலகில் பல மீன்களைப் பாய்ந்து பற்றிக் கொண்டு படகுக்குத் திரும்புகிறது. ஆனால், அதற்குள் அந்தப் பறவை எங்கே அந்த மீன்களை விழுங்கி விடுமோ என்ற காரணத்தால் ஓர் இறுக்கமான வளையத்தை அதன் கழுத்தில் மாட்டி விட்டு விடுகிறார்கள் மீனவர்கள். அதன் காரணமாக அந்தப் பறவைகளால் அந்த மீனை விழுங்க முடிவதில்லை.

இந்நிலையில் அந்தப் பறவைகள் படகுக்கு வந்ததும் அதன் அலகில் உள்ள மீனை எடுத்துக் கொண்டு மீண்டும் அனுப்பி விடுகிறார்கள். இப்படியாக ஒன்றல்ல, இரண்டல்ல பல நூற்றாண்டுகளாகவே இந்தக் கார்மரான்ட் என்ற பறவை மனிதர்களுக்கு இந்த அறிய சேவையை பயன் கருதாது செய்து வருகிறது.

Pages