வருகின்ற 31ஆம் தேதிமாலை 5.16 முதல் இரவு 8.40 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. எனவே, சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? எனப் பார்ப்போம்.
🌕 உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.
🌕 கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.
🌕 ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
🌕 கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
🌕 கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
🌕 பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
🌕 கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
🌕 கிரண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
🌕 கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
🌕 சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு :
🌕 கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தைப் பார்க்கக் கூடாது. கிரகணத்தின் போது உறங்கக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
🌕 மேலும், கிரகண நேரத்தின் போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக் கூடியதாக சில கதிர் வீச்சுகள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
🌕 இதனை ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் வெட்டக்கூடாது.
🌕 எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
🌕 கிரகணத்தின் போது உணவு அருந்தக் கூடாது. கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்துவிட்டு கோவிலுக்குச் சென்று விட்டு பிறகு, உணவு அருந்தலாம்.