இதன் தண்டு இலை முழுவதும் பச்சை நிறத்தில் இருக்கும். படத்தில் இருப்பது தண்டு இலை சிகப்பு நிறத்தில் இருக்கும்.
இது பசியை தாங்கக் கூடியது. அதேசமயம் களைப்பு வராது.
நாங்கள் மலைக்குள் செல்லும் போது இதன் இலையை சிறிது மென்று தின்று மூன்று கையளவு தண்ணீர் குடித்து விட்டுப் போக
அன்று முழுவதும் பசி இருக்காது. தண்ணீர் தாகம் இராது. களைப்பு இருக்காது. இது அனுபவம்.
இது கசப்பு புளிப்பு துவர்ப்பு என மூன்று
சுவை உடையது.
இதன் இவை நிழலில் உலர்த்தி பொடி செய்து இரண்டு விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து காலை மாலை இருவேளை தேனில் கலந்து சாப்பிடும் முன்பு சாப்பிட்டு வர இருதய சம்பந்தப்பட்ட
இருதய பலவீனம் மாரடைப்பு இருதய ஓட்டை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து குணமாவது மட்டுமன்றி உடல் அதிக உற்சாகமாக இருக்கும்.
இம்மூலிகையின் தண்டுப் பகுதியில் இருக்கும் சதையை மட்டும் எடுத்து
சென்னை லயோலா கல்லூரி பூச்சியல் ஆய்வு நிறுவனம் முனைவர் திரு பாண்டிக்குமார் அவர்கள் ஆய்வு செய்து சர்க்கரை வியாதிக்கு நல்ல முறையில் பயன்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதன் சமூலத்தை நிழலில் உலர்த்தி ஒரு மண்டலம் சாப்பிட்டு வர காயகல்பம். இம்மூலிகையை சாப்பிட்டவர்களுக்கு த்
தான் இதன் அருமை தெரியும்.
படத்தை பாருங்கள் அதன் தண்டு பகுதியில் உள்ள சதையும் இரத்தம் போல் இருக்கும் அதுவும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு சுவை உடையது.
இம்மூலிகையை தனவசியம் என்று செல்வார்கள். அது எப்படியோ ஆனால் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர உடம்பு நல்ல அழகு பெற்று முக வசியமாகும்.