ஆட்டுகொழுப்பு வருவல் ரொம்ப சுவையாக இருக்கும் செய்து சாப்பிட்டு பாருங்கள் - சியோ தமிழ்

Breaking

Sunday, March 18, 2018

ஆட்டுகொழுப்பு வருவல் ரொம்ப சுவையாக இருக்கும் செய்து சாப்பிட்டு பாருங்கள்

   
ஆட்டுகொழுப்பு வருவல்.

தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கொழுப்பு – 500 கிராம்.
விழுது அரைக்க தேவையான பொருட்கள்:-
காய்ந்த மிளகாய் = 7 (தேவைப்பட்டால் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்)
இஞ்சி இரண்டு துண்டு
பூண்டு = 5 பல்லு
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு
(கொழுப்பை வதக்க எண்ணெய் எதுவும் தேவையில்லை)
காய்ந்த மிளகாயை சுடு நீரில் ஊறவைத்து, இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து, விழுது தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:-
முதலில் ஆட்டுக்கொழுப்பை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவியபின்
தயிர், மஞ்ஞள் தூள், உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் ஊற வைக்கவம். பின்னர் தண்ணீரில் அலசி தவாவில் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.வேக வைக்கும் போது கறிவேப்பிலை சிறிதளவு சேர்க்கவும். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால்,கொழுப்பு எண்ணெய் மேலே மிதந்து வரும், அதை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அரை கிலோ கொழுப்பிற்கு கால் லிட்டர் கொழுப்பு எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெய்யை தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சமையலுக்கு பயன் படுத்திக்கொள்ளலாம் அல்லது ஆம்லட், பனீர் தோசைக்கு போட்டு சாப்பிடலாம்.
எண்ணெய் வடித்த பிறகு, அரைத்துவைத்திருக்கும் விழுதை கொழுப்புடன் சேர்த்து, மிதமான தீயில் மசாலா வாசனை போகும்வரை வேகவைக்கவும். ஏற்கனெவே உப்பு சேர்த்துள்ளதால் உப்பு ருசித்து பார்த்தபின்பு தேவையிருந்தால் சேர்க்கலாம்.
கடைசியாக, பச்சைகொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். இப்போது ஆட்டுக்கொழுப்பு வருவல் தயார். தொண்டையில் சும்மா அல்வா மாதிரி வழுக்கிட்டு போகும். இத்துடன் பேலியோ காய் சலாட்டுடன் சாப்பிட்டால் போதும். 12 மணி நேரத்திற்க்கு பசி எடுக்காது. போதுமான ஆற்றல் நமக்கு குறைந்த செலவில் கிடைக்கும்.
பின் குறிப்பு:- ஆட்டுக்கொழுப்பு தனியாக கிடைக்காது. அஜ்மான் city centre Carrefour-ல் நாங்கள் ஆட்டுக்கொழுப்பு கிடைக்குமான்னு விசாரித்தபோது, கிலோ எட்டு திர்ஹம்ஸ் க்கு கொடுத்தாங்க.(140 இந்திய ரூபாய்) ஆஸ்திரேலியா ஆட்டுகொழுப்பு இது. ஆஸ்திரேலியா ஆட்டுக்கறி மட்டும் வாங்கினால் 35 திர்கம்ஸ் விலை. அதனால் கொழுப்பு மட்டும் கிடைக்கும்போது வாங்கினால் நமக்கு லாபம்.

Pages