சிறுநீர் தொற்றை போக்கும் இயற்கை வழிமுறைகள் - சியோ தமிழ்

Breaking

Wednesday, August 10, 2016

சிறுநீர் தொற்றை போக்கும் இயற்கை வழிமுறைகள்


சிறுநீர் தொற்றை போக்கும் இயற்கை
வழிமுறைகள் பற்றி நாம் இந்த
வீடியோவில் பார்க்கலாம்

சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இதற்கு டிஸ்யூரியா என்று பெயர்.

தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, பிறப்புறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது, சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்ல தயங்காமல், சரியான நேரத்தில், சிறுநீரகவியல் நிபுணரை அணுகுவதன் மூலம் சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்
பொதுவாக, சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. தொடர் பிரசவம், மாதவிடாய் காலத்திற்கு பின், சிறுநீர் பாதையில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றால், பெண்களுக்கு இப்பிரச்னை உண்டாகிறது.
சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை, இதன் அறிகுறிகள்.
சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள் 
 

No comments:

Post a Comment

Pages